044-29510532 / 29510513 / 29510505
English


உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
- குறள் #596

அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு வரவேற்கிறோம்

நிதித் துறை, தமிழ்நாடு அரசு



எங்களை பற்றிய

மேலும் விவரங்கள்

  நிதித் தொடர்பான தகவல்களை மிகவும் பயனுள்ள வகையில் பகுப்பாய்வு செய்யவும், மாநிலத்தின் கணக்குகளை மின்னணுத் தகவல் தொகுப்பு உபகரணங்கள் மூலம் பகுப்பாய்வு செய்து சிறப்பான முறையில் வரவு செலவினைத் திட்டமிடும் நோக்குடன் 1971 ஆம் ஆண்டு மத்திய வரவு செலவுத் திட்ட விவரங்கள் தொகுப்பு மையம் ஒன்றை அரசு தோற்றுவித்தது. இந்த மின்னணு தகவல் தொகுப்பு வசதிகளைப் பயன்படுத்தி அரசுத் துறைகளின் பலதரப்பட்ட செயல்பாடுகளுக்குத் தேவையான வகையில் அரசுத் தகவல் தொகுப்பு விவர மையம் 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நிர்வாக வசதிகளுக்காக 1975 ஆம் ஆண்டு மேற்கண்ட இரண்டு மையங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையம் (GDC) ஏற்படுத்தப்பட்டது.

அரசுத் தகவல் தொகுப்பு விவர மையம் கீழ்க்காணும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.


  • அரசுப் பணியாளர்களுக்கான பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம்

      அரசு ஆணை நிலை எண் 201 நிதி (ஓய்வூதியம்) துறை, நாள்.21.05.2009இன் படி, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள், நகராட்சிப் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பணியாளர்களின் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்ட கணக்குகள் அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அரசு ஆணை நிலை எண் 463, நிதி (ஓய்வூதிய குறை தீர்ப்பு) துறை, நாள் 27.12.2013இன் படி, மாநிலக் கணக்காயரால் பராமரிக்கப்பட்டு வந்த அரசுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குகள் இத்துறைக்கு 01.01.2014 அன்று மாற்றம் செய்யப்பட்டது.


  • உள்ளாட்சி அமைப்புப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

      உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 31,158 நிலையாக்கப்படாத பணியாளர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் இணையதளம் வழியாக, சந்தாபிடித்தம் மற்றும் அதற்கீடான உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு ஆகியவை பதிவு செய்யப்பட்டு உள்ளாட்சி நிதி தணிக்கை துறையினரால் தணிக்கை செய்யப்பட்ட நிலையாக்கப்படாத பணியாளர்களுக்கு 2021-2022 ஆண்டு முடிய கணக்குத் தாள் வழங்கப்பட்டுள்ளது.


  • புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்(NMP) மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் (ICDS) திட்டப் பணியாளர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி (SGPF)

      அரசாணை (நிலை) எண் 108, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, நாள் 19.04.2010ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் (NMP) மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் (ICDS) திட்டப் பணியாளர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி குறித்தப் பணிகள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு ஒப்படைக்கப்பட்டன.

      அரசாணை (நிலை) எண் 53 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை நாள் 20.07.2015 இல் இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டப் பணியாளர்களிடம் இருந்து ஆகஸ்ட் 2015 முதல் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும் கருவூலம் / சம்பளக் கணக்கு அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட வரவின பட்டியல்களின் அடிப்படையில் 2020-2021ஆம் ஆண்டு வரை கணக்குத்தாள்கள் தொகுக்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 2021-2022ஆம் ஆண்டிற்கான கணக்குத்தாள் தொகுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

      அரசு கடித எண். 5992/ச.ந-4-2/2017–4, நாள் 12.04.2018–ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற/விருப்ப ஓய்வு/காலமான பணியாளர்களுக்கான இறுதி தொகை வழங்கிட செப்டம்பர் 2018 முதல் ஆணைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

சேவைகள்

எங்களின் சேவைகள்

  • அரசுப் பணியாளர்களுக்கான பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம்

     01.04.2003 அன்று, அதற்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட அரசுப் பணியாளர்கள் / நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் / ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி பள்ளி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். மேற்காணும் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்கு எண்கள், பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட வருடாந்திர கணக்குச் தாட்கள் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட இறுதி கணக்குத்தாட்கள் வழங்கப்பட்டுள்ள விவரம் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

    மொத்த சந்தாதாரர்கள் - 31-03-2024 வரை

    கணக்குத் தாட்கள் - 2022 - 2023

    இறுதி கணக்குத்தாள் - 31-03-2024 வரை

  • உள்ளாட்சி அமைப்புப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

     01.04.2003 அன்று, அதற்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் மாநகராட்சிகள் / நகராட்சிகள் / பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் நிலையாக்கப்படாத பணியாளர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். மேற்காணும் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்கு எண்கள், பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட வருடாந்திர கணக்குச் தாட்கள், வழங்கப்பட்டுள்ள விவரம் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

    மொத்த சந்தாதாரர்கள் - 31-03-2024 வரை

    கணக்குத் தாட்கள் - 2022 - 2023

  • புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் (NMP) மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் (ICDS) திட்டத்தின் கீழ் வரும் பணியாளர்கள் விவரம்

     புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் (NMP) (சத்துணவு அமைப்பாளர் / சமையலர் / சமையல் உதவியாளர்) மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் திட்டம் (ICDS) (அங்கன்வாடி பணியாளர் / அங்கன்வாடி உதவியாளர்) ஆகிய பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (SGPF) பொருந்தும். மேற்காணும் பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (SGPF) கணக்கு எண்கள், பொது வருங்கால வைப்பு நிதி (SGPF) வருடாந்திர கணக்குச் தாட்கள், பொது வருங்கால வைப்பு நிதி (SGPF) இறுதி ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டுள்ள விவரம் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.

    மொத்த சந்தாதாரர்கள் - 31-03-2024 வரை

    கணக்குத் தாட்கள் - 2022 - 2023

    இறுதி கணக்குத்தாள் - 31-03-2024 வரை

அ.கே.கே

அடுத்தடுத்து கேட்கப்படும் கேள்விகள்

தமிழ்நாடு அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்(CPS), புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் பற்றி அடுத்தடுத்து கேட்கப்படும் சில கேள்விகள் (FAQ) தொடர்புடைய பதில்கள் விளக்கங்களுடன் குறிப்பாக பொதுமக்கள் மற்றும் பணியாளர்களின் தகவலுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்(CPS)



  • 1. அரசாணை எண்,259, நிதி(ஓய்வூதியம்) துறை, நாள்.06.08.2003ன் படி 01.04.2003 அன்று அல்லது அதன் பின்னர் அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் அனைவரும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தின் கீழ் வருகிறார்கள்.

      2. அரசாணை எண்.430, நிதி (ஒய்வூதியம்) துறை, நாள், 06.08.2004ன் படி புதிய CPS எண் ஒதுக்கீடு செய்தல் மற்றும் பராமரிக்கும் பணிகள் மாநில கணக்காயர் அலுவலகத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது.

      3. அரசாணை எண்.201, நிதி (ஓய்வூதியம்) துறை, நாள்.21.05.2009 ன் படி கீழ்கண்ட பணியாளர்களுக்கு புதிய CPS எண் ஒதுக்கீடு செய்தல் மற்றும் பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

           அ. ஊராட்சி ஒன்றிய பள்ளிகளின் ஆசிரியர்கள்
           ஆ. உதவி பெறும் பள்ளிகள்/நிறுவனங்களின் ஆசிரியர்கள்
           இ. ஊராட்சி ஒன்றிய பள்ளிகளின் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்
           ஈ. மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள்
           உ. டவுன் பஞ்சாயத்துகளின் தற்காலிக பணியமர்த்தப்படாத பணியாளர்கள்
           ஊ. பஞ்சாயத்து யூனியன்களின் தற்காலிக பணியமர்த்தப்படாத பணியாளர்கள்

      4. அரசாணை எண்-463, நிதி (PGC) துறை, நாள் 27.12.2013ன் படி புதிய CPS எண் ஒதுக்கீடு செய்தல் மற்றும் பராமரிக்கும் பணிகள் அனைத்தும் அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. மாற்றம் செய்த பின்னர் அனைத்து அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிலையாக்கப்படாத பணியாளர் ஆகியோர்களுக்கு இவ்வலுவலகத்தில் புதிய கணக்கு எண்வழங்குதல் மற்றும் கணக்குகள் பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

      தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் புதிய பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தின் கீழ் வரமாட்டர்கள். பணிவரன் முறை செய்து காலமுறை ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட பின்னர் அவர்கள் CPS ன் கீழ் வர தகுதி பெறுவார்கள்.
  • அரசு கடிதம் எண் 47286/அலவன்ஸ்/06-1 நாள் 07.09.2006, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 01.04.2003க்கு முன் தேர்வு செய்யப்பட்டு01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் CPS-ன் கீழ் மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும் என்றும்,GPF கணக்கு எண்களை ஒதுக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

  • S1 படிவத்தினை cps.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த பணியாளர்களின் விவரங்களை பூர்த்தி செய்து DDO ன் சான்றொப்பம் பெற்று அதனை scan செய்து இணையதளத்தில் அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு அனுப்பப்பட வேண்டும். பணியாளர்களின் விவரங்கள் இணையதளத்தில் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டவுடன் பணியாளர்களுக்கு புதிய CPS கணக்கு எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும். அந்தந்த DDOs மூலம் புதிய கணக்கு எண்ணை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வழிகாட்டுதல் படிவம் “A” இணைக்கப்பட்டுள்ளது.

  • அரசாணை எண்.430, நிதி (ஓய்வூதிய) துறை, நாள் 06.08.2004ன் படி பணியாளர்கள் பணியில் சேர்ந்த மாதம் முதல் ஒவ்வொரு பணியாளரின் ஊதியத்திலிருந்து 10% அடிப்படை ஊதியம் + அகவிலைபடி (B.P+DA) ஐ மாதாந்திர சந்தா பிடித்தம் செய்யப்பட வேண்டும் . முதல் மாதத்திலிருந்து பிடித்தம் செய்யப்படவில்லையெனில் நிலுவை பிடித்தமாக செய்யப்பட வேண்டும் அதாவது (சந்தா + நிலுவை)

  • அரசு ஊழியர்களின் பங்களிப்புக்கு இணையான தொகையை அரசு ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது.

  • CPS INDEX NUMBER ஐ பெற்ற பிறகு CPSல் சேர்ந்த மாதம் தொடங்கி, DDO–வினால் சந்தா பிடித்தம் செய்யப்படும் நிலுவை மாதங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு தவனை முறையில் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

  • CPS சந்தா பிடித்தம் செய்யவேண்டிய கணக்குத் தலைப்பு பின்வருமாறு:

    Sl.No. Description Head of Account
    1 8342 Other Deposits 117 Defined Contribution Pension Scheme for Government Employees – AA Employee's Contribution 8342 00 117 AA 801 01
    2 8342 Other Deposits 117 Defined Contribution Pension Scheme for Aided Institutions – AC Employee's Contribution 8342 00 117 AC 801 01
    3 8342 Other Deposits 117 Defined Contribution Pension Scheme for Panchayat Union Schools – AG Employee's Contribution 8342 00 117 AG 801 01
    4 8342 Other Deposits 117 Defined Contribution Pension Scheme for Municipal Employees – Employee's Contribution 8342 00 117 AI 801 01
    5 8342 Other Deposits 117 Defined Contribution Pension Scheme for Non Provincialised Employees of Local Bodies – Employee's Contribution 8342 00 117 AK 801 01
    6 8342 Other Deposits 117 Defined Contribution Pension Scheme for Non Provincialised Employees of Local Bodies – Local Body's Contribution 8342 00 117 AL 801 01

  • 01.04.2003க்கு முன் ஏற்கனவே GPF கணக்கை வைத்திருக்கும் மற்றும் ஓ.ய்வூதியம் பெறக்கூடிய சேவையில் இருக்கும் எந்தவொரு நபரும் சேவையில் எந்த இடையூறும் இல்லாமல் புதிய தலைப்பில் சேர்ந்தால் ஓய்வூதியத் திட்டத்தில் அல்லது GPF இல் தொடரலாம். ஓய்வூதிய திட்டத்தில் தொடர ஒரு ஊழியர் 01.04.2003 க்கு முன் ஓய்வூதியம் பெறக்கூடிய அரசுப் பணியில் சேர்ந்திருக்க வேண்டும் மற்றும் 01.04.2003 அன்று அல்லது அதற்குப் பிறகு சேவையில் இடைவேளையின்றி மற்றொரு ஓய்வூதியம் பெறும் அரசுப் பணியில் சேர்ந்திருக்க வேண்டும் (கடிதம் 12473 காண்க நிதி (ஓய்வூதியம்)/2009 நாள் 27.05.2009 இடைப்பட்ட அரசு விடுமுறைகள் மற்றும் சனி//ஞாயிறு போன்ற அரசு விடுமுறை நாட்கள் சேவையின் இடைவேளையாக கருதப்படாது http//ww.w.tn.gov./in/gosdb/goorders/finance/fin_e_34911_2009 pdf.

  • 10 (அ) (1) விண்ணப்பதாரர்கள் 01.04.2003க்கு முன் வழக்கமாக நியமிக்கப்படுபவர்கள் பழைய ஓய்வூதியத் தி,ட்டத்திற்குத் தகுதியுடையவர்கள் அவர்கள் வழக்கமாக 01..04,203 அன்று அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்டால் அவர்களுக்கு தற்காலிகமாக GPF எண் ஒதுக்கப்பட்டிருந்தாலும் CPS இன் கீழ் வருவார்கள். (கடிதம் 12473/நிதி (ஓய்வூதியம்)/2009 நாள் 27.05.2009 பார்க்கவும்.

  • ஒவ்வொரு ஆண்டும் CPS அறிக்கை தயார் செய்யப்பட்டு CPS கணக்கு எண் பெற்றுள்ள அனைவருக்கும் அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் இணைய தளத்தில் கணக்குத்தாள் வெளியிடப்படுகிறது. பணியாளர்களின் கணக்கத்தாளினை http://cps.tn.gov.in/public என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து இருப்பு தொகையினை அறிந்து கொள்ளலாம்.

  • அவ்வப்போது வட்டி விகிதம் மாற்றம் செய்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட அரசாணை GPF வட்டி விகிதம் போலவே அரசால் வெளியிடப்படுகிறது. அதன் படி வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது.

  • விடுபட்ட வரவினங்கள் அந்த DDO மூலம் தனியர்களது கணக்கில் வரவு வைக்கப் பட வேண்டும்.எவ்வாறு சரிசெய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் படிவம் “B” இணைக்கப்பட்டுள்ளது.

  • தற்போது CPS கணக்குகளில் இருந்து எந்தவித முன்பணமோ அல்லது பணம் எடுக்கவோ அனுமதிக்க அரசாணை எதுவும் வெளியிடப்படவில்லை.

  • அரசாணை 59, நிதி (PGC) துறை, நாள்.22.02.2016 ன் படி இறந்த/ ஓய்வு பெற்ற / பணி துறப்பு செய்த பணியாளர்களுக்கு கணக்கு முடிக்கப்பட்டு இறுதி தொகை வழங்கப்படுகிறது. அரசாணை எண் 288, நிதி (PGC) துறை, நாள்.10.11.2016 ன் படி CPS-ல் செலுத்தப்பட்ட தொகையினை GPF கணக்கிற்கு மாற்றம் செய்யப்படுகிறது.

  • 2020–2021 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கணக்கு அறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது, 2020–2021 க்கான விடுப்பட்ட வரவினங்களை பதிவு செய்யும் பணி நடந்துகொண்டிருக்கின்றன.

  • வழி காட்டுதல் கடிதம் “C”இணைக்கப்பட்டுள்ளது.

  • வழி காட்டுதல் படிவம் “D”இணைக்கப்பட்டுள்ளது.

  • Suffix ஐ மாற்ற வேண்டிய அவசியமில்லை வழி காட்டுதல் படிவம் “E”இணைக்கப்பட்டுள்ளது.

  • அரசாணை எண் 316 , நிதி (PGC - 1) துறை, நாள்.12.08.2020 ன் படி அயற்பணியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு எவ்வாறு சந்தா பிடித்தம் மற்றும் பிடித்தம் செய்யப்பட்ட சந்தா தொகைகளுக்கு நிகரான அரசு பங்கு தொகை அகியவைகளை எந்த கணக்கு தலைப்பின் கீழ் வரவு வைக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவுரைகள் வழக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அரசாணை வழி காட்டுதல் படிவம் “F”இணைக்கப்பட்டுள்ளது.

  • சிறப்புக் கால முறை ‘ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அரசு கடித எண் 57113 , நிதி (PGC - 1) துறை/2017-3, நாள்.31.10.2020-ன் படியும். தற்காலிக பணியாளர்களுக்கு 10a (i) அரசு கடித எண் 42789 , நிதி (PGC ) துறை, நாள்.24.12.2021-ன் படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட சந்தா தொகை மற்றும் அதற்கான வட்டி மட்டும் கணக்கிட்ட வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்


  •   ;">தமிழக அரசின் சத்துணவு பணியாளர்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி திட்டம் அரசாணை(நிலை) எண் 108, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டம் (சந4-2) துறை நாள் 19-04-2010 மூலம் நடைமுறைக்கு வந்தது. அரசாணை (நிலை) எண் 53, சமூகநலம் மற்றும் சத்துணவுதிட்டம் (சந4-2) துறைநாள் 20/07/2015 அன்று வெளியிடப்பட்ட அரசு ஆணை மூலம் சத்துணவு மையம், குழந்தை வளர்ச்சி மையங்களில் பணியாற்றும்

           அமைப்பாளர்
           சமையலர்
           சமையல் உதவியாளர்
           அங்கன்வாடி பணியாளர்
           அங்கன்வாடி உதவியாளர்

    ஆகியோர் அனைவரும் 01-08-2015 முதல் பொது வருங்கால வைப்பு நிதியின் கீழ் வர தகுதியுடையவர் ஆவர்.

  • அங்கன்வாடிபணியாளர் மற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணி ஓய்வு வயது 60 ஆகும். அரசாணை (நிலை) எண் 87, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை (சந7-1) துறை நாள் 02.12.2021-ன்படி, அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பணி ஓய்வு வயது 58-லிருந்து 60 ஆகவும், அரசாணை (நிலை) எண் 63, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை (சந7-1) துறை நாள் 08-10-2021 படி சத்துணவு சமையலர், மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு பணி ஓய்வு வயது 58-லிருந்து 60-ஆகவும்அதிகரிக்கப்பட்டது.

  • சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு முன்னதாக அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வழங்கப்பட்டுள்ள பயனாளர் குறியீடு (USER ID) மற்றும் கடவுச்சொல்(PASSWORD) மூலமாக S1 படிவம் மூலம் மட்டுமே பெற இயலும். http://cps.tn.gov.in/nmp

      S1 படிவம் தனியரின் கையெழுத்து பிரதியாக இருக்க வேண்டும். அதை சம்மந்தப்பட்ட அலுவலர் இணையதள முகவரியில் தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். S1 படிவம் மற்றும் தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்யப்பட்ட இரு படிவங்களையும் அரசு தகவல் தொகுப்பு விவர மையம் ஒப்பிட்டு பார்த்த பின் சரியாக இருந்தால் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய கணக்கு எண் வழங்கப்படும். S1 படிவத்தில் ஏதேனும் பிழை இருந்தால் விண்ணப்பம் திருத்தம் மேற்கொள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலருக்கு திருப்பி அனுப்பப்படும்.

    குறிப்பு: பெயர் தலைப்பெழுத்து, பிறந்த தேதி, பணியில் சேர்ந்தநாள், பதவியின் பெயர், வாரிசு விவரம், நியமனதாரர் பங்கு விகிதம் இவைகள்சரியான முறையில் இடம் பெற வேண்டும்.


  • சந்தா:

      பொது வருங்கால வைப்புநிதி – புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் – 8009 தமிழ்நாடு அரசு வைப்புநிதி – 60 இதர வைப்புநிதி – 103 மற்ற இதர PF-BM(DPC 8009-60-103-BM-0000)


    வட்டி:

      பொது வருங்கால வைப்புநிதி – புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் / ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் (DPC 8009-60—103- BN -0008)


  • அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் தயாரிக்கப்படும் வருடாந்திர கணக்குத் தாளை http://cps.tn.gov.in/nmp/public என்ற இணையதள முகவரியில் சென்று பார்வையிடலாம்

    Note: தனியருக்கு வழங்கப்பட்டுள்ள பொது வருங்கால வைப்புநிதி கணக்கு எண்(USER ID) மற்றும் பிறந்த தேதியினை (PASSWORD) மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவு செய்து தனியரது கணக்குத்தாளை பார்வையிடலாம்.
    .

  • அரசு ஆணையின் படி வட்டி விகிதம் அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்டு அதன்படி வழங்கப்பட்டுவருகிறது.

  • சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தால் தான், விடுபட்ட வரவினத்தை சரி செய்ய இயலும். இணையதளத்தில் உள்ள விடுபட்ட வரவின படிவத்தின் (MISSING CREDIT PORTAL) http://cps.tn.gov.in/nmp முழுமையாக பூர்த்தி செய்து அதனை சம்பந்தப்பட்ட சம்பள கணக்கு அலுவலர்(PAO) அல்லது மாவட்ட கருவூல அலுவலர் (DTO) அவர்களுக்கு இணையதளம் வழியாக அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு விடுபட்ட வரவின விவரங்கள்(MISSING CREDIT DETAILS) வலை தளத்தில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்யும் போது பட்டியலின் அடையாள வில்லை எண்(TOKEN NUMBER, DATE, VOUCHER NUMBER OF THE BILL) தவறாமல் குறிப்பிடப்பட வேண்டும்.

      மேற்கண்டவாறு பணம் பெற்று வழங்கும் அலுவலரால் அனுப்பப்பட்ட (MISSING CREDIT DETAILS) விடுபட்ட வரவின விவரங்கள் சம்பள கணக்கு அலுவலர்/மாவட்ட கருவூல அலுவலரால் சரிபார்க்கப்பட்டு அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு இணையதளம் வழியாக அனுப்பப்படும். அவ்விவரங்கள் இத்துறையில் சரிபார்க்கப்பட்டு சந்தாதாரர்களது அடுத்தநிதி ஆண்டுக்கான கணக்குதாளில் சேர்க்கப்படும்.


  • பொது வைப்புநிதி இறுதி தொகை வழங்கிட அரசு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் (சந4-2) துறை அரசாணை (நிலை) எண் 53, நாள் 20-07-2015 உரிய படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பணம் பெற்று வழங்கும் அலுவலரால் உரிய படிவங்கள் பிற்சேர்க்கை படிவம் III மற்றும் பிற்சேர்க்கை படிவம் IV ஆகியவைகள் கீழ்காணும் விவரங்களுடன் அனுப்பப்படல் வேண்டும்.

        1. பணிப்பதிவேட்டின் முன்பக்க நகல் மற்றும் பணி ஓய்வு/இறப்பு குறித்த விவரம் பதியப்பட்ட பக்கத்தின் நகல் (பணம் பெற்று வழங்கும் அலுவலர் சான்றொப்பத்துடன்)
       2. ஓய்வு பெற்றதற்கான செயல் முறை ஆணை நகல் (பணம் பெற்று வழங்கும் அலுவலர் சான்றொப்பத்துடன்)
       3. பிற்சேர்க்கை III (பணம் பெற்று வழங்கும் அலுவலர் சான்றொப்பத்துடன்)
       4. பிற்சேர்க்கை படிவம் IV (சந்தாதாரர் கையொப்பம் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலர் சான்றொப்பத்துடன்)
       5. தனியரின் சரியான பிறந்த தேதி மற்றும் சரியான பணி ஓய்வு பெற்ற தேதியை பணிப் பதிவேட்டுடன் ஒப்பிட்டு பிற்சேர்க்கை படிவம் III மற்றும் படிவம் IVல் சரியாக குறிப்பிடவும்.
       6. தனியருக்கு பணம் பெற்று வழங்கப்படும் சார்நிலை கருவூலத்தை கட்டாயமாக குறிப்பிடப்பட வேண்டும் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரின் முகவரியின் அஞ்சல் குறியீட்டு எண் அலுவலகத்தின் தொலைபேசி எண் மற்றும் மாவட்டத்தின் பெயரினை கட்டாயமாக குறிப்பிடவும்.
       7. பிற்சேர்க்கை படிவம் IIIல் தனியருக்கு கடைசியாக பிடித்தம் செய்யப்பட்ட 10 மாத சந்தா தொகை அடங்கிய விவரங்களுடன்(TOKEN NUMBER, VOUCHER NUMBER OF THE BILL)ஆகியவற்றை முழுமையாக பூர்த்தி செய்து பணம் பெற்று வழங்கும் அலுவலர் சான்றொப்பத்துடன் அனுப்புமாறு கோரப்படுகிறது.
       8. மறைந்த பணியாளர்களுக்கு இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் நகல் பணம் பெற்று வழங்கும் அலுவலரின் சான்றொப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும் (நகல்)
       9. வாரிசு சான்றிதழில் ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருப்பின் இதர வாரிசுகளிடமிருந்து தடையின்மை சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். ஏனைய வாரிசுதார்களிடம் மனுதாரர் பொது வைப்புநிதி இறுதி தொகையினை பெற்று கொள்ள தடை ஏதும் இல்லை என்பதற்கான தடையின்மை சான்றிதழ்(NO OBJECTION CERTIFICATE) அனுமதி பெற்ற பத்திரத்துறை பதிவாளர்(NOTARY PUBLIC) அவர்களிடம் சான்றொப்பம் பெற்று அதன் அசலினை இணைக்க வேண்டும். அசல் தடையின்மை சான்று பெற்ற பிறகே இறுதி ஒப்பளிப்பு ஆணை வழங்க இயலும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

  • மறுமதிப்பீடு/கால நீட்டிப்பு வழங்க சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் / குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் கருவூல அலுவலர் மற்றும் தனியரின் அசல் நகல் கொடுபடா சான்றிதழுடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும், மேலும் இறந்த பணியாளர்களுக்கு கால நீட்டிப்பு செய்து வழங்கிட அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வழங்கப்பட்ட அசல் ஆணையின் உடன் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் நகல் பணம் பெற்று வழங்கும் அலுவலரின் சான்றொப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும் (நகல்) வாரிசு சான்றிதழில் ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருப்பின் இதர வாரிசுகளிடமிருந்து தடையின்மை சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

      ஏனைய வாரிசுதார்களிடம் மனுதாரர் பொது வைப்புநிதி இறுதி தொகையினை பெற்று கொள்ள தடை ஏதும் இல்லை என்பதற்கான தடையின்மை சான்றிதழ் (NO OBJECTION CERTIFICATE) அனுமதி பெற்ற பத்திரத்துறை பதிவாளர் (NOTARYPUBLIC) அவர்களிடம் சான்றொப்பம் பெற்று அதன் அசலினை இணைக்க வேண்டும். இறந்த பணியாளர்களுக்கு மேற்கூறிய இணைப்புகளுடன் அசல் நகலும் இணைக்கப்பட்டால் தான் கால நீட்டிப்பு செய்து வழங்க இயலும்.

  • பணி ஓய்வு பெற்று அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் இறுதி ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்ட பணியாளர்களுக்கு இறுதி ஒப்பளிப்பு ஆணையில் விடுபட்ட வரவினம் தெரிவிக்கப்பட்டிருந்தால் ,விடுபட்ட வர வினங்களை உரிய படிவத்தில் விடுபட்ட வரவின மாதம், அதன் பட்டியலின்அடையாள வில்லை எண்(TOKEN NUMBER, DATE, VOUCHER NUMBER OF THE BILL), பிடித்தம் செய்யப்பட்ட சந்தா தொகை அடங்கிய விவரங்களை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர் மற்றும் கருவூல அலுவலரின் சான்றொப்பம் பெற்று இவ்வலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

  • தற்காலிக முன்பணம் பெற்றிட உரிய ஆணைகள் அரசு கடித எண் 9831. சந4-2/2020-3 நாள் 18-06-2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது, அக்கடிதத்தில் தற்காலிக முன்பணம் பெறும் முறை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் முதன் முறையாக தற்காலிக முன்பணம் பெறுவதற்கு 5 ஆண்டுகள் சந்தா தொகை செலுத்தியிருக்க வேண்டும். சந்தாதாரர் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் நாளுக்கு ஓராண்டு இருக்கும் பொழுது 90% பகுதி இறுதித் தொகையினைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

      இத்தொகை மாவட்ட அலுவலரால் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் / மாவட்ட திட்ட அலுவலர்) அவர்களால் ஒப்பளிப்பு செய்யப்படும். மீத முள்ள 10% தொகை அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்ட பிறகே சம்பளம் வழங்கும் அலுவலரால் அனுமதிக்கப்பட வேண்டும். இது குறித்து IFHRMS-ல் தகுந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • பெயர் மற்றும் தலைப்பெழுத்து திருத்தம் மேற்கொள்ள தனியரது சரியான பெயர் மற்றும் தலைப்பெழுத்துக்கான ஆங்கிலத்தில் உள்ள ஏதேனும் ஒரு ஆவணத்துடன் ஆதார் அட்டையின் நகல் மற்றும் பணிப் பதிவேட்டின் முதல் பக்க நகலினை இணைத்து இவற்றில் பணம் பெற்று வழங்கும் அலுவலரின் சான்றொப்பத்துடன் அனுப்பப்பட வேண்டும்.

தொடர்பு கொள்ள

கீழ்க்காணும் தொலை பேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்

திரு. க. விஜயேந்திர பாண்டியன், இ.ஆ.ப.,

ஆணையர் (மு.கூ.பொ)

காலியிடம்

ஆட்சி அலுவலர்

திரு.ந.சிவகுமார், M.C.A.,

துணை இயக்குநர்

திருமதி.வ. அமுதப்ரியா, M.B.A

கணக்கு அலுவலர்

திரு.மா.அழகன், M.A.,

புள்ளி விவர கண்காணிப்பாளர்

திருமதி. வீ. சுதா வேதவல்லி, B.Com.,

உதவி இயக்குநர்

திரு. மு. பாலாஜி, M.C.A.,

செயல்முறை மேலாளர்

அலுவலக எண்கள்

-

தொலை பேசி எண்கள்: 044-29510513, 044-29510505

தொடர்பு கொள்க

5வது தளம்,
பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை,
571, அண்ணா சாலை, நந்தனம்,
சென்னை-600 035.


மின்னஞ்சல்



தொலைபேசி

044-29510532 / 29510513 / 29510505